கர்நாடகத்தில் தமிழர்கள் கொலை; இது எங்கள் மாநிலத்தின் பிரச்னை: ராமலிங்க ரெட்டிஉதவித்தொகையை வழங்காமல், மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது தவெக அரசு: கனிமொழிமுதல்வர் விஜய்யுடன் திருமாவளவன் சந்திப்பு!அமைச்சர் நிர்மலின் சர்ச்சைக்குரிய பேச்சு நீக்கம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலக பணிக்கான டெண்டர் வெளியீட்டில் விதிமீறல்!மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்: மத்திய அமைச்சா் அதவாலே தகவல்எழும்பூா் ரயில் நிலைய மறுசீரமைப்பு: ரயில் சேவைகளில் மாற்றம்ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: டிரம்ப் எச்சரிக்கைதேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!
/

சிறந்த மாதிரிப் பள்ளியாக அல்லிநகரம் அரசுப் பள்ளி தேர்வு

தேனி மாவட்டத்தில் சிறந்த மாதிரி பள்ளியாக அல்லிநகரம் அரசு மேல்நிலைப் பள்ளியை அரசு தேர்வு செய்துள்ளது.

Updated On :30 ஜனவரி 2024, 10:08 pm IST

தேனி மாவட்டத்தில் சிறந்த மாதிரி பள்ளியாக அல்லிநகரம் அரசு மேல்நிலைப் பள்ளியை அரசு தேர்வு செய்துள்ளது.
அல்லிநகரம் அரசு மேல்நிலைப் பள்ளி கடந்த 1985-ம் ஆண்டு நடுநிலைப் பள்ளியாக தொடங்கப்பட்டு, மேல்நிலைப் பள்ளியாக நிலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்தப் பள்ளியில் தற்போது மொத்தம் 1,067 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளிக் கல்வித் துறை சார்பில் மாவட்ட அளவில் சில்வார்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி, அல்லிநகரம் அரசு மேல்நிலைப் பள்ளி ஆகியவை சிறந்த பள்ளிகளாக தேர்வு செய்யப்பட்டு அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
இந்த நிலையில், அல்லிநகரம் அரசு மேல்நிலைப் பள்ளியை மாவட்ட அளவில் சிறந்த மாதிரி பள்ளியாக அரசு தேர்வு  செய்து அறிவித்துள்ளது என்றும், இதற்காக அரசு சார்பில் அல்லிநகரம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் ரூ.50 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது என்றும் மாவட்ட பள்ளிக் கல்வித்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.