தேனி அருகே இருசக்கர வாகனத்தில் பேரன்களுடன் தோட்டத்திற்குச் சென்ற முதியவர், ஜீப் மோதியதில் வியாழக்கிழமை உயிரிழந்தார்.
அரண்மனைப்புதூரைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டி(70). இவர், தனது பேரன்கள் தங்கேஷ்வரன் (14), ஆகாஷ்வரன்(9) ஆகியோருடன் அரண்மனைப்புதூரில் இருந்து இருசக்கர வாகனத்தில் கொடுவிலார்பட்டியில் உள்ள தனது தோட்டத்திற்குச் சென்றுள்ளார்.
அப்போது, எதிரே திசையில் வருசநாட்டில் இருந்து தேனி நோக்கி வந்த ஜீப், இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில், இருசக்கர வாகனத்தில் சென்ற முத்துப்பாண்டி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தங்கேஷ்வரன், ஆகாஷ்வரன் ஆகியோர் பலத்த காயமடைந்து, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து குறித்து அரண்மனைப்புதூர் காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிந்து ஜீப் ஓட்டுநர் கேரளா, பூம்பாறையைச் சேர்ந்த கலைச்செல்வம்(27) என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






