திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

பெரியகுளத்தில் தேசிய வாக்காளர் தினப்பேரணி

பெரியகுளம் ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிர் கல்லூரி சார்பில் தேசிய வாக்காளர் தின பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

Updated On :24 ஜனவரி 2019, 1:04 am IST

பெரியகுளம் ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிர் கல்லூரி சார்பில் தேசிய வாக்காளர் தின பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
பேரணியை கல்லூரி முதல்வர் எஸ்.சேசுராணி தலைமை வகித்து தொடக்கி வைத்தார். பெரியகுளம் வட்டாட்சியர் உ.ரத்னமாலா கலந்து கொண்டு, வாக்குரிமை நமது கடமை, வாக்களிப்பது நமது கடமை என்ற தலைப்பில் பேசினார். 
பேரணி, கல்லூரியில் ஆரம்பித்து நகரின் முக்கிய வீதிகளின்  வழியாக சென்றது. வாக்களிப்பதால் ஏற்படும் பயன்கள் குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை  மாணவிகள் ஏந்திச்சென்றனர். பேரணியில் 350 க்கு மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.  
மேலும் வாக்குரிமை பற்றிய கவிதை, கட்டுரை மற்றும் 
பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. 
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர்கள் மற்றும் ஆலோசகர்கள் செய்திருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.