தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

கேரளத்தில் உள்ள ஏலக்காய் தோட்டங்களில் வேலை செய்ய அனுமதிக்க கோரிக்கை

கேரளத்தில் உள்ள ஏலக்காய் தோட்டங்களில் வேலை செய்ய தேனி மாவட்ட தொழிலாளர்களை அனுமதிக்க இரு மாநில அரசுகள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என ஏலத்தோட்ட தொழிலாளர்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News image
ஏலக்காய் தோட்டம்
Updated On :4 ஆகஸ்ட் 2020, 10:16 am

DIN

கேரளத்தில் உள்ள ஏலக்காய் தோட்டங்களில் வேலை செய்ய தேனி மாவட்ட தொழிலாளர்களை அனுமதிக்க இரு மாநில அரசுகள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என ஏலத்தோட்ட தொழிலாளர்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேனி மாவட்டம், கம்பம், போடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஏலக்காய் தோட்டங்களில் வேலைகளுக்கு செல்வார்கள். 

சுமார் ஆயிரம் ஜீப் மற்றும் பஸ்களில் குறைந்தது முப்பதாயிரம் தொழிளார்கள் சென்று வந்தனர்.

 கடந்த ஐந்து மாதங்களாக அவர்களுக்கு வேலை இல்லை. அந்த குடும்பங்களின் நிலையை கருத்தில் கொண்டு தமிழக கேரள அரசுகள் கலந்து பேசி முடிவு விரைவில் எடுக்க வேண்டும்.

ஏலத்தோட்ட வேலை என்பது அருகில் அருகில் அமர்ந்து நின்று வேலை செய்வது இல்லை.

இந்த விவசாயத்தில் நெருங்கி நின்று வேலை செய்ய முடியாது. ஒரு ஏல செடிக்கும் மற்றொரு ஏல செடிக்கும் 8 அடி இடைவெளி உள்ளது.

 மேலும் ஒரு ஜீப்பில் வேலைக்கு செல்பவர்கள் ஏறுவதற்கு முன் சானிடைசரை வைத்து கை கழுவிட்டு முக கவசத்தோடுசெல்ல பாதுகாப்போடு அனுமதிக்கலாம்.

வேலைக்கு வருபவர்களுக்கு காய்ச்சல் இருமல் இருந்தால் அவரை பரிசோதனை செய்யலாம் அப்படி பாசிட்டிவ் என்று வந்து விட்டால் அந்த ஜீப்பை அனுமதிக்க தேவையில்லை.

இது வரை வீட்டில் இருந்தவர்கள் விழிப்புணர்வு அடைந்து இருப்பார்கள். 

ஏலத்தோட்டத்தை நம்பி இருக்கும் பல ஆயிரக்கணக்கான பேர்களின் வாழ்வாதாரம் கடந்த 5 மாதங்களாக கேள்வி குறியாக உள்ளது. 

இந்நிலை நீடித்தால் தொழிலாளர்களை காப்பாற்றுவது மிகவும் சிரமமாகும். 
துணை முதல்வர் மாவட்டத்தில் உள்ள தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை மீட்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஏல தோட்ட தொழிலாளர்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.