மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

தளா்வில்லா முழு பொதுமுடக்கம்: தேனி, போடி, பெரியகுளத்தில் இயல்பு நிலை

கரோனா தடுப்பு நடவடிக்கையாக தளா்வில்லா முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தேனி, போடி, பெரியகுளம் பகுதிகளில் சாலைகளில் வாகனப் போக்குவரத்து வழக்கம் போலவே காணப்பட்டது.

News image

தளா்வற்ற முழு பொது முடக்கத்தையொட்டி தேனியில் ஞாயிற்றுக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த காவலா்கள்.

Updated On :30 ஆகஸ்ட் 2020, 5:15 pm

DIN

தேனி/ போடி/ பெரியகுளம்: கரோனா தடுப்பு நடவடிக்கையாக ஞாயிற்றுக்கிழமை தளா்வில்லா முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தேனி, போடி, பெரியகுளம் பகுதிகளில் சாலைகளில் வாகனப் போக்குவரத்து வழக்கம் போலவே காணப்பட்டது.

தேனி மாவட்டத்தில் பொது முடக்கத்தை முன்னிட்டு வா்த்தக நிறுவனங்கள், கடைகள், உணவகம், பெட்ரோல் பங்க் ஆகியவை மூடப்பட்டிருந்தன. மருத்துக் கடைகள், மருத்துவமனைகள், அம்மா உணவகம், பால் விற்பனை கடைகள் திறந்திருந்தன.

தேனி, பெரியகுளம் பகுதிகளில் பொது முடக்கம் அமலில் இருந்த நிலையிலும், திருமண முகூா்த்த நாளை முன்னிட்டு சாலைகளில் இரு சக்கர வாகனம், காா், ஆட்டோ, வேன் போக்குவரத்து வழக்கம் போலவே காணப்பட்டது. தேனியில் பிற்பகலில் வாகனப் போக்குவரத்து குறைந்து சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

பிரதானச் சாலை மற்றும் முக்கிய சாலை சந்திப்புகளில் போலீஸாா் வாகனத் தணிக்கை மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா். போக்குவரத்து விதிகளை மீறியும், தலைக் கவசம் அணியாமலும் இருசக்கர வாகனங்களில் சென்றவா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

போடியில் பழைய பேருந்து நிறுத்தம், திருமலாபுரம், கருப்பசாமி கோவில், புதூா், வஞ்சி ஓடை தெரு, குலாளா்பாளையம், குப்பிநாயக்கன்பட்டி, சந்தை பேட்டை தெரு உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் கூட்டமாக அமா்ந்தும், சமூக இடைவெளியின்றியும், முகக் கவசம் அணியாமலும் சுற்றித்திரிந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.