இடுக்கி மாவட்டத்தில் கனமழை: மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை

இடுக்கி மாவட்டத்தில் கனமழை: மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை

தேனி மாவட்டம் அருகே உள்ள இடுக்கி மாவட்டத்தில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது

தேனி மாவட்டம் அருகே உள்ள இடுக்கி மாவட்டத்தில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து இடுக்கி மாவட்ட நிர்வாகம் ரெட் அலர்ட் அறிவித்துள்ளது.

கேரள மாநிலத்தில் 14 மாவட்டங்கள் உள்ளன. இதில் இடுக்கி  மாவட்டம் அருகே தேனி மாவட்டம் உள்ளது. இடுக்கி மாவட்டத்தில் 1.5 லட்சம் ஏக்கர் பரப்பளவில் ஏலக்காய் விவசாயம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வட கிழக்கு பருவமழை எதிரொலியாக இடுக்கி மாவட்ட நிர்வாகம் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ரெட்அலர்ட் விடுத்துள்ளது.

இதில் இரண்டு நாட்களிலும் பலத்த கனமழைக்கு எதிர்பார்க்கப்படுவதாகவும், குறைந்தபட்சம் 204 மில்லி மீட்டர் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அறிவித்துள்ளனர். இதனால் மாவட்ட நிர்வாகம் பேரிடர் மேலாண்மைக்கு தேவையான ஏற்பாடுகளை செய்து வருகிறது. மீட்பு குழுவினர் தயாராக உள்ளனர்.  

இரவு நேரங்களில், மலைச்சாலைகளில், தமிழக-கேரள எல்லை சாலைகளில் பொதுமக்கள் பயணம் செய்வதை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com