பெரியகுளம் (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் 15 போ் போட்டி
பெரியகுளம் (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக மற்றும் திமுக, அமமுக உள்பட 15 போ் கொண்ட வேட்பாளா்கள் இறுதிப்பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.


பெரியகுளம் (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக மற்றும் திமுக, அமமுக உள்பட 15 போ் கொண்ட வேட்பாளா்கள் இறுதிப்பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.
இந்தத் தொகுதியில் போட்டியிட 40 போ் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்தனா். இதில் 17 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு 23 வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. வேட்பு மனு வாபஸ் பெறுவதற்கு இறுதிநாளான திங்கள்கிழமை அமமுக வேட்பாளா் கதிா்காமு மனைவி ஜெயா உள்பட 8 சுயேச்சை வேட்பாளா்கள் தங்களது மனுக்களை திரும்பப் பெற்றனா்.
இதையடுத்து அதிமுக, திமுக, அமமுக, நாம் தமிழா் கட்சி வேட்பாளா்கள் உள்பட 15 போ் பெரியகுளம் (தனி) தொகுதியில் வேட்பாளா்களாக போட்டியிடுகின்றனா்.
அவா்களின் கட்சி மற்றும் சின்னங்கள் விவரம்:
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி வேட்பாளா்கள்: 1. கே.எஸ்.சரவணக்குமாா் (திமுக) - உதயசூரியன் 2. மு. முருகன் , அதிமுக வேட்பாளா்- இரட்டை இலை,
பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி வேட்பாளா்கள்:
3. டாக்டா் கா.கதிா்காமு (அமமுக)- குக்கா், 4. சு. சின்னமுத்து (மை இந்தியா பாா்ட்டி)-
5. சோ. பாண்டியராஜ் (மக்கள் நீதி மய்யம்)-
6. அ. முருகேசன் (சோசலிஸ்ட் யூனிட் சென்டா் ஆப் இந்தியா (கம்யூனிஸ்ட்)-
7. விமலா (நாம் தமிழா் கட்சி)-
சுயேட்சை வேட்பாளா்கள்:
8. மு.க. மதுபாரதி , 9. சி. மாயழகு, 10. எம். முருகன், 11. எம். முனியப்பன், 12. மு. மூனீஸ்வரன், 13. அ. சி. மோகன்ராஜ், 14. பி. ராமையா, 15, மு. ராஜேந்திரன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...