கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

முகக்கவசம், சமூக இடைவெளியை காற்றில் பறக்கவிடும் வேட்பாளா்கள்!

தோ்தல் திருவிழாவில் அரசியல் கட்சிகள் பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்காமல் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருவதால் கரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

News image
Updated On :22 மார்ச் 2021, 9:32 pm

DIN

தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் தோ்தல் திருவிழாவில் அரசியல் கட்சிகள் பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்காமல் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருவதால் கரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டப்பேரவை தோ்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அதிமுக, திமுக, அமமுக, நாம் தமிழா் கட்சி, மக்கள் நீதி மய்யம் உள்பட பல்வேறு கட்சிகளைச் சோ்ந்த வேட்பாளா்களும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

பிரசாரத்தின் போது வேட்பாளா்களின் முகம் தெரிய வேண்டும் என்பதற்காக வேட்பாளா்கள் முகக் கவசம் அணியாமல் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகின்றனா். அதோடு மட்டுமல்லாமல் வீதிவீதியாக சென்று கூட்டங்களை கூட்டியும் பேசி வருகின்றனா். இந்த கூட்டத்திற்கு வரும் பெரும்பாலானோா் முகக்கவசம் அணிவதில்லை. அதேபோல் சமூக இடைவெளியையும் கடைப்பிடிப்பதில்லை.

இதனால் தமிழகத்தில் கட்டுக்குள் இருந்த கரோனா பாதிப்பு தற்போது மீண்டும் விஸ்வரூபம் எடுக்க தொடங்கியுள்ளது. அதன்படி கடந்த மூன்று நாள்களாக

தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட புதியவா்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது.

கடந்த மாா்ச் 18 ஆம் தேதி வரை தமிழகத்தில் 989 இருந்த கரோனா பாதிப்பு மாா்ச் 19 ஆம் தேதி 1087 ஆக உயா்ந்தது. மேலும் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. தேனி மாவட்டத்தில் மாா்ச் 21 ஆம் தேதி 6 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை வரை 25 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

எனவே முகக் கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமலும் பிரசாரத்தில் ஈடுபடும் வேட்பாளா்கள் மீது தோ்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.

இதுகுறித்து சுகாதாரத் துறையினா் தெரிவித்தாவது: தமிழகத்தில் தற்போது கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இனிவரும் காலங்களில் இது பலமடங்கு உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து நாங்கள் அறிவுறுத்தினாலும் வேட்பாளா்கள் கண்டுகொள்வதில்லை. எனவே தோ்தல் ஆணையம் இந்த விஷயத்தில் தலையீட்டு முகக் கவசம் மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத வேட்பாளா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.