முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

கனமழையால் சுருளி அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்து

தேனி மாவட்டத்தில் உள்ள சுருளி அருவி பகுதியில் மழை பெய்ததால் நீர்வரத்து 18 நாட்களுக்கு பிறகு அதிகரித்துள்ளது.

News image
சுருளி அருவி
Updated On :14 மே 2021, 11:47 am

DIN

தேனி மாவட்டத்தில் உள்ள சுருளி அருவி பகுதியில் மழை பெய்ததால் நீர்வரத்து 18 நாட்களுக்கு பிறகு அதிகரித்துள்ளது.

தேனி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சுருளி அருவியில் கடந்த ஏப்.15 ல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அதிக நீர்வரத்து வந்தது. அதன் பிறகு சிறிது சிறிதாக நீர்வரத்து குறையத் தொடங்கியது.

இந்நிலைய்ல் தற்போது காற்றழுத்தம் உருவானதால் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான அரிசிப்பாறை, ஈத்தைப்பாறை ஓடைகளில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. இந்த நீர்வரத்தால் சுருளி அருவியில் நீர்வரத்து சுமார் 18 நாட்களுக்கு பிறகு ஏற்பட்டுள்ளது.

தற்போது கரோனா 2 ஆவது அலை ஊரடங்கு காரணமாக, அருவி மற்றும் வளாகப்பகுதிக்கு சுற்றுலா பயணிகள் வரத்தடை உள்ளது. மேலும் தொடர்மழை அறிவிப்பு காரணமாக  மேகமலை வன உயிரின சரணாலய ஊழியர்கள் அருவியின் நீர்வரத்தை கண்காணித்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.