கம்பம் ஊராட்சிப் பகுதிகளில் தடுப்பூசி செலுத்த பெண்கள் ஆர்வம்

கம்பம் ஒன்றிய ஊராட்சி பகுதிகளில் தடுப்பு ஊசி முகாமில் பெண்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று செலுத்திக்கொண்டனர்.
ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்தும் பெண்கள்.
ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்தும் பெண்கள்.

கம்பம் ஒன்றிய ஊராட்சி பகுதிகளில் தடுப்பூசி முகாமில் பெண்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று செலுத்திக்கொண்டனர்.

தேனி மாவட்டம், கம்பம் ஒன்றிய ஊராட்சி பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை 5 ஆவது தடுப்பூசி செலுத்தி கொள்ளும் முகாம் நடைபெற்றது.
கருநாக்கமுத்தன்பட்டி ஊராட்சியில் தலைவர் ஆ.மொக்கப்பன் தலைமையில், துணைத் தலைவர் சி.சரோஜா சிங்கராஜ் முன்னிலையில், முகாம் தொடங்கியது, காலை முதலே ஆண்களும், பெண்களும் வரிசையில் நின்று தடுப்பூசியை சேர்த்துக் கொண்டனர்.

இதேபோல் நாராயணத்தேவன் பட்டி சுருளிப்பட்டி குள்ளப்ப கவுண்டன்பட்டி, ஆங்கூர் பாளையம் உள்ளிட்ட ஊராட்சிகளிலும் தடுப்பூசி பெண்கள் ஆர்வத்துடன் செலுத்தி கொண்டனர்.  அண்டை மாநிலமான கேரளாவிற்கு ஏலக்காய் தோட்ட வேலைக்கு செல்வதால் தடுப்பூசி செலுத்த நீண்ட நேரம் வரிசையில் நின்று செலுத்திக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஊராட்சி ஒன்றிய உதவி செயற்பொறியாளர் ராஜேஸ்வரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயகாந்தன், கோதண்டபாணி, முகாம் கண்காணிப்பு அலுவலர் யூ.எம்.சேகர், ஊராட்சி மன்ற தலைவர்கள் நகமணி வெங்கடேசன், சாந்தி பரமன், பொன்னுத்தாய் குணசேகரன், பொன்னுத்தாய் செல்லையா, மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர் ஏ.கார்த்திக்ராஜா, ஆர்.ராஜேந்திரன், பி.ராஜா, வசந்தி சிவக்குமார் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் முகாமிற்கான  ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com