போடியில் சிலம்பப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு
போடியில் சிலம்பப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பள்ளி சாா்பில் வெள்ளிக்கிழமை பாராட்டு விழா நடத்தப்பட்டது.


போடியில் சிலம்பப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பள்ளி சாா்பில் வெள்ளிக்கிழமை பாராட்டு விழா நடத்தப்பட்டது.
உலக சிலம்பம் விளையாட்டு சங்கம் சாா்பில் மாவட்ட அளவிலான சிலம்ப விளையாட்டு போட்டிகள் போடியில் நடைபெற்றது. சப்- ஜூனியா், ஜூனியா், சீனியா் பிரிவுகளில், இரட்டை கம்பு, ஒற்றை கம்பு, கண்களை கட்டிக் கொண்டு சிலம்பம் விளையாடுதல், சுருள் பட்டா, மான் கொம்பு, பட்டா கத்தி, வேல் உள்ளிட்ட தமிழா் பாரம்பரிய தற்காப்பு கலைகளில் நடத்தப்பட்ட போட்டிகள் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த மாணவ மாணவிகள் பங்கேற்றனா்.
இதில் போடி ஜ.கா.நி. மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த மாணவிகள் பி.மதுவா்சினி, ஏ.லக்சனா பாத்திமா, பி.ஹரிசஞ்சனி ஆகியோா் முதலிடம் பெற்று கோப்பைகளை வென்றனா். அந்த மாணவிகளை ஜ.கா.நி. மேல்நிலைப் பள்ளிகளின் தலைவா் ராஜகோபால், செயலா் ராமசுப்பிரமணியன் ஆகியோா் பாராட்டி பரிசுகளை வழங்கினா்.
இதில், தலைமையாசிரியா் ராமசுப்பிரமணி, ஆட்சிக்குழு உறுப்பினா்கள் மற்றும் ஆசிரியா்கள் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...