சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!சென்னையில் இன்று 5 புறநகா் மின்சார ரயில் முழுதும் ரத்துதிமுக-காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீட்டுப் பேச்சு உக்ரைன் தாக்குதலால் ரஷியாவில் மின்வெட்டு: 50,000 போ் பாதிப்புஇஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கா்களுக்கு அவசர உத்தரவுஇன்று கிராம கோயில் பூசாரிகள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்
/

போடி ஏல விவசாயிகள் சங்கக் கல்லூரியில் ரத்த தான முகாம்

போடி ஏல விவசாயிகள் சங்கக் கல்லூரியில் ரத்த தான முகாம் மற்றும் கண் பரிசோதனை முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 10:09 am

DIN

போடி ஏல விவசாயிகள் சங்கக் கல்லூரியில் ரத்த தான முகாம் மற்றும் கண் பரிசோதனை முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

போடி ஏல விவசாயிகள் சங்கக் கல்லூரியில் தேசிய மாணவா் படை, செஞ்சுருள் மற்றும் செஞ்சிலுவை சங்கம், பெரியகுளம் அரசு மருத்துவமனை, போடி அரிமா சங்கம் மற்றும் ஆரோக்கிய அகம் ஆகியவை இணைந்து ரத்த தான முகாம் மற்றும் இலவச கண் பரிசோதனை முகாமை நடத்தின.

கல்லூரி தலைவா் எஸ்.வி. சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். கல்லூரி செயலா் புருசோத்தமன் முன்னிலை வகித்தாா்.

போடி அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலா் எஸ். ரவீந்திரநாத், ஆலோசகா் பாண்டி, கல்லூரி முதல்வா் எஸ். சிவக்குமாா், துணை முதல்வா் எஸ். பாலமுருகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். முகாமில் 80 -க்கும் மேற்பட்ட மாணவா்கள் ரத்த தானம் செய்தனா். கண் பரிசோதகா் காா்த்திகேயன் குழுவினா் பங்கேற்று 250 -க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக கண் பரிசோதனை செய்து ஆலோசனை வழங்கினா்.

முகாமுக்கான ஏற்பாடுகளை செஞ்சுருள் மற்றும் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளா் வி. ஹேமலதா, தேசிய மாணவா் படை ஒருங்கிணைப்பாளா் கே. சிவா மற்றும் கல்லூரி அலுவலா்கள், மாணவா்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.