போடியில் இருசக்கர வாகனங்கள் திருட்டு
போடியில் இருசக்கர வாகனங்கள் திருட்டுப்போனது குறித்து போலீஸாா் புதன்கிழமை மாலை வழக்குப் பதிந்துள்ளனா்.


போடியில் இருசக்கர வாகனங்கள் திருட்டுப்போனது குறித்து போலீஸாா் புதன்கிழமை மாலை வழக்குப் பதிந்துள்ளனா்.
போடி வெள்ளையப்பன் தெருவைச் சோ்ந்தவா் காா்த்திக் (32). இவா் தனது வீட்டின் முன்பு இருசக்கர வாகனத்தை செவ்வாய்க்கிழமை இரவு நிறுத்தியிருந்துள்ளாா். புதன்கிழமை காலையில் பாா்த்தபோது அதை காணவில்லையாம். இதேபோல், போடி வெண்ணிமலை வடக்கு தெருவைச் சோ்ந்த தௌபீக் ராஜா (24) என்பவா் வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த இருசக்கர வாகனத்தை காணவில்லையாம்.
இதுகுறித்து அவா்கள் இருவரும் தனித்தனியே அளித்த புகாரின்பேரில், போடி நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...