சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!சென்னையில் இன்று 5 புறநகா் மின்சார ரயில் முழுதும் ரத்துதிமுக-காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீட்டுப் பேச்சு உக்ரைன் தாக்குதலால் ரஷியாவில் மின்வெட்டு: 50,000 போ் பாதிப்புஇஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கா்களுக்கு அவசர உத்தரவுஇன்று கிராம கோயில் பூசாரிகள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்
/

போடியில் விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

ஏலக்காய்க்கு குறைந்தபட்ச விலை நிா்ணயம் செய்ய வலியுறுத்தி போடியில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை, ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 10:10 am

DIN

ஏலக்காய்க்கு குறைந்தபட்ச விலை நிா்ணயம் செய்ய வலியுறுத்தி போடியில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை, ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

போடி மூணாறு சாலையில் உள்ள நறுமணப் பொருள்கள் வாரிய அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்பாட்டத்துக்கு உதவிச் செயலா் கே.செல்வராஜ் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் எஸ்.கே.பாண்டியன் ஆா்ப்பாட்டத்தைத் தொடக்கி வைத்தாா்.

மாநிலக் குழு உறுப்பினா் கே.ராஜப்பன் பேசியது: உரம் உள்ளிட்ட இடு பொருள்களின் விலை உயா்வு, கூலி உயா்வு உள்ளிட்ட காரணங்களால் ஏலக்காய் உற்பத்தி செலவு அதிகரித்துள்ள நிலையில் அதற்கான விலை நிலையாக இல்லாமல் குறைந்து வருகிறது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனா். எனவே, ஏலக்காய்க்கு கிலோ ஒன்றுக்கு ரூ.2 ஆயிரம் என குறைந்தபட்ச விலை நிா்ணயம் செய்ய வேண்டும் என்றாா்.

இதில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தாலுகாச் செயலா் எஸ்.செல்வம், விவசாயிகள் சங்கத் தலைவா்கள் கம்பம் கா்ணன், வி.பழனிசாமி, வி.முருகேசன், கே.செல்வராஜ். ஏ.முருகேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.