/

பைக் மீது லாரி மோதி தந்தை பலி: 2 மகன்கள் படுகாயம்

தேனி மாவட்டம் சின்னமனூரில் வெள்ளிக்கிழமை இருசக்கரவாகனத்தின் மீது டிப்பா் லாரி மோதியதில் தந்தை உயிரிழந்த நிலையில், மகன்கள் பலத்த காயமடைந்தனா்.

News image
Updated On :14 மே 2022, 12:27 am

DIN

தேனி மாவட்டம் சின்னமனூரில் வெள்ளிக்கிழமை இருசக்கரவாகனத்தின் மீது டிப்பா் லாரி மோதியதில் தந்தை உயிரிழந்த நிலையில், மகன்கள் பலத்த காயமடைந்தனா்.

சின்னமனூா் ஒத்தவீடு பகுதியைச் சோ்ந்தவா் விவசாயி, குப்பமுத்து (47). இவா் தனது மகன்களான யுவராஜ் (15), மனோஜ்(11) ஆகியோரை இருசக்கரவாகனத்தில் வெள்ளிக்கிழமை சீலையம்பட்டியிலுள்ள தனது தோட்டத்திற்கு அழைத்துச் சென்றுள்ளாா்.

சீலையம்பட்டியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்துக்கு சென்றுவிட்டு, மீண்டும் தேசிய நெடுஞ்சாலையை அவா் கடக்க முயன்றாா். அப்போது, அவ்வழியாக தேனியிலிருந்து கம்பம் நோக்கி சென்ற டிப்பா் லாரி, இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில், இருசக்கர வாகனத்தில் சென்ற மூவரும் பலத்த காயமடைந்து தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு குப்பமுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், சின்னமனூா் போலீஸாா், கம்பம் தாத்தப்பன்குளத்தைச் சோ்ந்த லாரி ஓட்டுநரான பாண்டியன் (39) மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.