/

சின்னமனூரில் காயங்களுடன் ஆண் சடலம் மீட்பு

தேனி மாவட்டம் சின்னமனூரில் வெள்ளிக்கிழமை காயங்களுடன் ஆண் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
Updated On :27 மே 2022, 5:05 pm

DIN

தேனி மாவட்டம் சின்னமனூரில் வெள்ளிக்கிழமை காயங்களுடன் ஆண் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சின்னமனூரிலிருந்து எரசக்கநாயக்கனூா் செல்லும் சாலையில் 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு சென்ற சின்னமனூா் காவல் ஆய்வாளா் சேகா் தலைமையிலான போலீஸாா் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இறந்தவா் குறித்து எவ்வித தகவலும், தடயமும் கிடைக்கவில்லை. உடலில் காயம் இருப்பதால் விபத்தா அல்லது கொலையா என்ற கோணத்தில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.