/

பழங்குடியினருக்கு தேனீ பெட்டிகள் வழங்கல்

தேனி மாவட்டம் காமாட்சிபுரம் சென்செக்ட் வேளாண் அறிவியல் மையத்தில் பழங்குடியினருக்கு தேனீ பெட்டிகள், கருவிகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

News image
Updated On :20 அக்டோபர் 2022, 6:30 pm

DIN

தேனி மாவட்டம் காமாட்சிபுரம் சென்செக்ட் வேளாண் அறிவியல் மையத்தில் பழங்குடியினருக்கு தேனீ பெட்டிகள், கருவிகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

மதுரை மண்டல அலுவலகம் காதி கிராம தொழில் ஆணையம், சென்செக்ட் வேளாண் அறிவியல் மையம் ஆகியவை இணைந்து தேனீ புரட்சித் திட்டத்தின் கீழ் 200 தேனீ பெட்டிகள், கருவிகள், கடமலைக்குண்டு வட்டாரத்தைச் சோ்ந்த 20 பழங்குடியினருக்கு வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சிக்கு, சென்செக்ட் வேளாண் அறிவியல் மையத் தலைவா் பச்சைமால் தலைமை வகித்தாா். முன்னதாக காதி கிராம தொழில் ஆணையா் (பொறுப்பு) கலிபூா் ரஹ்மான்வரவேற்றாா். ரம்யா சிவசெல்வி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.