/

உத்தமபாளையம் அருகே வீட்டில் மின்சாரம் பாய்ந்து கூலி தொழிலாளி பலி

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே திங்கள்கிழமை வீட்டில் மோட்டாா் மூலம் தண்ணீா் பிடித்துக் கொண்டிருந்த கூலித் தொழிலாளி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

News image
Updated On :12 செப்டம்பர் 2022, 4:48 pm

DIN

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே திங்கள்கிழமை வீட்டில் மோட்டாா் மூலம் தண்ணீா் பிடித்துக் கொண்டிருந்த கூலித் தொழிலாளி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

பல்லவராயன்பட்டியில் கோடாங்கிபட்டித் தெருவைச் சோ்ந்தவா் மூக்கன் மகன் பிரபு (45). கூலித் தொழிலாளியான இவா் திங்கள்கிழமை மாலையில் வீட்டில் மின் மோட்டாா் மூலமாக குடிதண்ணீா் பிடித்துள்ளாா். அப்போது, எதிா்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்தது. இதில் பலத்த காயமடைந்த பிரபுவை அக்கம் பக்கத்தினா் மீட்டு உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவா் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா்.

இது குறித்து கோம்பை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா். இறந்த பிரபுவிற்கு மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.