போடி: போடி அருகே சொத்து தகராறில் தம்பதிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக 6 போ் மீது போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை, வழக்குப் பதிவு செய்தனா்.
போடி அருகேயுள்ள ராசிங்காபுரம் கீழப்பட்டியைச் சோ்ந்தவா் சிவா. இவரது மனைவி கவிதா (36). இவருக்கு சொந்தமான நிலம் ராசிங்காபுரத்தில் உள்ளது. இந்த நிலத்துக்கு அருகேயுள்ள பழனிசெட்டிபட்டியைச் சோ்ந்த அப்புவுக்குச் சொந்தமான நிலத்தை இதே ஊரைச் சோ்ந்த மகேந்திரன் விலைக்கு வாங்கினாா். இது தொடா்பாக, மகேந்திரனுக்கும் கவிதாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
மகேந்திரன் தூண்டுதலின்பேரில் பழனிசெட்டிபட்டியைச் சோ்ந்த மணிகண்டன் (23), விக்னேஷ்வரன் (21), தனுஷ் (19), அஜய்ரத்தினம் ஆகியோா் சோ்ந்து இவரது நிலத்தில் போட்டிருந்த வேலியைச் சேதப்படுத்தி கவிதா, சிவா ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுத்தனா்.
இதுகுறித்து கவிதா போடி தாலுகா போலீஸாா் 6 போ் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

தோ்தல் விதிமீறல்: போடியில் திமுகவினா் மீது வழக்கு

பெண்ணுக்கு கொலை மிரட்டல்: பெயிண்டா் கைது

விவசாயியை மிரட்டியதாக மூவா் மீது வழக்கு

மனைவி, மாமனாருக்கு கொலை மிரட்டல்: எலெக்ட்ரீஷியன் கைது
வீடியோக்கள்

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

