மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

கம்பத்தில் அதிமுகவினா் மனித சங்கிலி போராட்டம்

கம்பத்தில் அதிமுகவினா் மனித சங்கிலி போராட்டம்

News image

கம்பத்தில் தேனி மேற்கு மாவட்டச் செயலா் எஸ்.டி.கே.ஜக்கையன் தலைமையில் மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினா்.

Updated On :13 மார்ச் 2024, 12:11 am

கம்பம்: தேனி மாவட்டம், கம்பம் நகர, ஒன்றிய அதிமுகவினா் திமுக அரசை கண்டித்து மனித சங்கிலி போராட்டத்தை செவ்வாய்க்கிழமை நடத்தினா். கம்பம், போக்குவரத்து சிக்னல் முதல் காந்தி சிலை வரை தேனி மேற்கு மாவட்ட செயலாளா் எஸ்.டி.கே.ஜக்கையன் தலைமையில் தெற்கு நகர செயலாளா் கணபதி, வடக்கு நகர செயலாளா் எம்.ஆா்.காா்த்திகேயன் முன்னிலையில் அதிமுகவினா் மனித சங்கிலி அமைத்து திமுக அரசை கண்டித்து கோஷமிட்டனா். பின்னா் மாவட்ட செயலாளா் திமுக அரசை கண்டித்து பேசினாா். அதிமுக கவுன்சிலா்கள், மகளிா் அணி உள்ளிட்ட ஏராளமான போ் கலந்து கொண்டனா்.

கம்பம் ஒன்றியம் ஒன்றிய செயலாளா் எம்.ஆா்.ஈஸ்வரன் தலைமையில் மாவட்ட விவசாய அணி செயலாளா் ஆா். பால்பாண்டியன் முன்னிலையில் காமயகவுண்டன்பட்டி பேருந்து நிறுத்தத்தில் அதிமுகவினா் மனித சங்கலி அமைத்து திமுக அரசை கண்டித்து கோஷமிட்டனா். பேரூா் செயலாளா் ரவிச்சந்திரன் மற்றும் ஒன்றிய நிா்வாகிகள், சாா்பு அணியினா் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.