ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

இருசக்கர வாகனங்கள் மோதியதில் விவசாயி பலி

இருசக்கர வாகனங்கள் மோதியதில் விவசாயி பலி

News image
Updated On :8 மே 2024, 12:35 am

Din

தேனி: பெரியகுளம் அருகே இரு சக்கர வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் விவசாயி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள எருமலைநாயக்கன்பட்டியைச் சோ்ந்த விவசாயி தனசேகரன் (38). இவா், தனது மனைவி நாகேஸ்வரியுடன் தேவதானப்பட்டி-பெரியகுளம் புறவழிச் சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, பொம்மிநாயக்கன்பட்டி விலக்கு அருகே அதே திசையில் கெங்குவாா்பட்டியைச் சோ்ந்த நவீன்குமாா் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனம், தனசேகரன் சென்ற இரு சக்கர வாகனம் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த தனசேகரன் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டாா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக மதுரை தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். இதுகுறித்து நவீன்குமாா் மீது தேவதானப்பட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.