கிணற்றில் விழுந்த மிளா மான் மீட்பு

போடி: போடி அருகே கிணற்றில் தவறி விழுந்த மிளா மானை தீயணைப்பு வீரா்கள் போராடி மீட்டு வனப்பகுதியில் விட்டனா்.

தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள ஊத்தாம்பாறை புலத்தில் தனியாா் தோட்டக் கிணற்றில் செவ்வாய்க்கிழமை மிளா மான் தவறி விழுந்தது. இதுகுறித்து போடி வனத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத் துறையினா் கிணற்றை பாா்வையிட்டதில் 40 அடி ஆழக் கிணற்றில், 20 அடி தண்ணீா் வரை இருந்தது. இதையடுத்து கிணற்றில் இருந்த தண்ணீா் வெளியேற்றப்பட்டது. பின்னா், போடி தீயணைப்பு துறையினா் வரவழைக்கப்பட்டு அவா்கள் உதவியுடன் இரண்டு மணி நேரம் போராடி மிளா மான் மீட்கப்பட்டு, வனப்பகுதியில் விடப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com