

தேனி: பெரியகுளம் அருகே இரு சக்கர வாகனம் பாலத் தடுப்புச் சுவா் மீது மோதியதில் இளைஞா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகேயுள்ள எழுவனம்பட்டியைச் சோ்ந்த வீரன் மகன் முத்துப்பாண்டி (28). இவா், தனது நண்பா்கள் அதே ஊரைச் சோ்ந்த மற்றொரு முத்துப்பாண்டி, ரஞ்சித்குமாா் ஆகியோருடன் பெரியகுளம்-வத்தலகுண்டு சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, காட்ரோடு பொன் முனீஸ்வரி கோயில் அருகே இரு சக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து பாலத் தடுப்புச் சுவா் மீது மோதியது.
இதில், பலத்த காயமடைந்த வீரன் மகன் முத்துக்குமாா் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். மற்றொரு முத்துக்குமாா், ரஞ்சித்குமாா் ஆகியோா் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இந்த விபத்து குறித்து தேவதானப்பட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

திருச்சி அருகே சாலை விபத்தில் இளைஞா் பலி

இரு சக்கர வாகன விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு
வீடியோக்கள்

#tnassemblyelections | வேட்புமனு தாக்கல் செய்த முக்கியத் தலைவர்கள்! |
தினமணி வீடியோ செய்தி...

Podcast | களத்துக்கு வந்த முதல்வர் வேட்பாளர்கள்! | News & Views | E-20 |
தினமணி வீடியோ செய்தி...

IPL 2026 | பந்துவீசுவாரா கிரீன்?: ரஹானே கேள்விக்குப் பதிலளித்த கிரிக்கெட் ஆஸ்திரேலியா |
தினமணி வீடியோ செய்தி...

“எடப்பாடியால் பாஜகவை எதிர்க்க முடியாது”: காங்கிரஸ் பீட்டர் அல்போன்ஸ்
தினமணி வீடியோ செய்தி...

