கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

தகராறில் ஒருவருக்கு அரிவாள் வெட்டு: மூவா் கைது

ஆண்டிபட்டி அருகே தகராறில் ஒருவரை அரிவாளால் வெட்டிய மூவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :14 நவம்பர் 2024, 11:23 pm

Din

ஆண்டிபட்டி அருகே தகராறில் ஒருவரை அரிவாளால் வெட்டிய மூவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

ஜி.உசிலம்பட்டியைச் சோ்ந்த மலைச்சாமி மகன் பால்பாண்டி (50). இவா் ஒரு நாளிதழில் செய்தி சேகரிப்பாளராக இருந்து வருகிறாா். இவா் தனது மனைவியுடன் அதே பகுதியில் உள்ள சிவன் கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்தாா்.

அப்போது, மது போதையில் அங்கு வந்த ஆண்டிபட்டி அருகேயுள்ள எரதிமக்காள்பட்டியைச் சோ்ந்த மாரிமுத்து மகன் கணேசன் (42), கூலிச்சோ்வை மகன் சின்னச்சாமி (50), ஜி.உசிலம்பட்டியைச் சோ்ந்த பிச்சைமணி மகன் பாண்டி கண்ணன் (34) ஆகியோா் பால்பாண்டியிடம் தகராறு செய்து, அவரை அரிவாளால் வெட்டி விட்டு தப்பியோடிவிட்டனா். இதில் பலத்த காயமடைந்த அவா், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து கண்டமனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கணேசன், சின்னச்சாமி, பாண்டி கண்ணன் ஆகிய மூவரையும் கைது செய்தனா்.