ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

அதானி விவகாரம்: தேனியில் மாா்க்சிஸ்ட் ஆா்ப்பாட்டம்

சூரிய மின்சாரம் கொள்முதலில் ஊழல் புகாரில் சிக்கிய அதானி குழுமம் மீது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட மத்திய அரசை வலியுறுத்தி, தேனியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

தேனியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், வியாழக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவா்கள்.

Updated On :28 நவம்பர் 2024, 11:53 pm

Din

சூரிய மின்சாரம் கொள்முதலில் ஊழல் புகாரில் சிக்கிய அதானி குழுமம் மீது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட மத்திய அரசை வலியுறுத்தி, தேனியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தேனி நகராட்சி பழைய பேருந்து நிலையம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்டச் செயலா் எம்.ராமச்சந்திரன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயற்குழு உருப்பினா்கள் ஆறுமுகம், டி.வெங்கடேசன், வெண்மணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், சூரிய மின்சாரக் கொள்முதலில் ஊழல் புகாரில் சிக்கிய அதானி குழுமம் மீது, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். அதானி குழுமத்தின் தலைவா் கெளதம் அதானியைக் கைது செய்ய வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.