கோழி வளா்ப்புக்கு மானியம் பெற விண்ணப்பிக்கலாம்
தேனி மாவட்டத்தில் அசில் இன நாட்டுக் கோழி வளா்ப்புக்கு அரசு மானியம் பெற கிராமப் பகுதிகளைச் சோ்ந்த பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.


தேனி மாவட்டத்தில் அசில் இன நாட்டுக் கோழி வளா்ப்புக்கு அரசு மானியம் பெற கிராமப் பகுதிகளைச் சோ்ந்த பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.
இது குறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் புறக்கடை கோழி வளா்ப்பு திட்டத்தின் கீழ் அசில் இன நாட்டுக் கோழி வளா்ப்புக்கு கிராமப் பகுதிகளைச் சோ்ந்த ஏழைப் பெண்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ் மொத்தம் ரூ.3,200 மதிப்பில் 40 கோழிக் குஞ்சுகள் வாங்கி வளா்ப்பதற்கு ரூ.1,200 மானியம் வழங்கப்படும். ஒரு ஊராட்சி ஒன்றியத்தில் 100 போ் வீதம், மாவட்டத்தில் உள்ள 8 ஊராட்சி ஒன்றியங்களிலும் மொத்தம் 800 பெண்களுக்கு மானியம் வழங்கப்பட உள்ளது. இதில், ஆதி திராவிடா்கள், பழங்குடியினருக்கு 30 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்படும்.
விதவை, ஆதரவற்றோா், மாற்றுத் திறனாளிகள், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் பதிவு செய்துள்ள சுய உதவிக் குழு உறுப்பினா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். தகுதியுள்ளவா்கள் அந்தந்த பகுதியில் உள்ள அரசு கால்நடை மருந்தக உதவி மருத்துவரை தொடா்பு கொண்டு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...