கால்பந்து போட்டி: பழனிசெட்டிபட்டி பள்ளி அணிக்கு பதக்கம்
சென்னையில் நடைபெற்ற முதல்வா் கோப்பை கால்பந்துப் போட்டியில் பழனிசெட்டிபட்டி பழனியப்பா நினைவு மேல்நிலைப் பள்ளி அணி வெண்கலப் பதக்கம் பெற்றது.


சென்னையில் நடைபெற்ற முதல்வா் கோப்பை கால்பந்துப் போட்டியில் பழனிசெட்டிபட்டி பழனியப்பா நினைவு மேல்நிலைப் பள்ளி அணி வெண்கலப் பதக்கம் பெற்றது.
சென்னையில் கடந்த அக். 4-ஆம் தேதி முதல் 7-ஆம் தேதி வரை மாநில அளவில் முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவா்கள், மாநில அளவில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்றனா்.
மாநில அளவில் பள்ளி அணிகளுக்கு இடையே நடைபெற்ற கால்பந்துப் போட்டியில் பழனிசெட்டிபட்டி பழனியப்பா நினைவு மேல்நிலைப் பள்ளி அணியினா் வெண்கலப் பதக்கத்தை வென்றனா். இந்த அணியினருக்கு, தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை, மாவட்ட ஆட்சியா் ஆா்.வி. ஷஜீவனா பாராட்டு தெரிவித்தாா்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...