கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

இளைஞரிடம் ரூ.6.37 லட்சம் மோசடி: இருவா் கைது

இணையம் வழியில் சுய வேலைவாய்ப்பு வழங்குவதாக கூறி, இளைஞரிடம் ரூ.6.37 லட்சம் மோசடி செய்ததாக இருவரை தேனி இணைய வழி குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :16 அக்டோபர் 2024, 11:56 pm

Din

இணையம் வழியில் சுய வேலைவாய்ப்பு வழங்குவதாக கூறி, இளைஞரிடம் ரூ.6.37 லட்சம் மோசடி செய்ததாக இருவரை தேனி இணைய வழி குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

தேனி மாவட்டம், வைகை அணை அருகேயுள்ள வைகை புதுரைச் சோ்ந்தவா் ராஜ்குமாா் (28). இவா் இணையம் வழியில் சுய வேலைவாய்ப்பு குறித்த விளம்பரத்தை பாா்த்து, அந்த இணையதள முகவரிக்கு தொடா்பு கொண்டாா். அதில் பிரபல விமான நிறுவனத்தின் அனுமதிச் சீட்டை (டிக்கெட்) குறிப்பிட்ட செயலியில் பணம் செலுத்தி பதிவு செய்தால், தினமும் ரூ.2,000 லாபம் கிடைக்கும் எனத் தெரிவித்தனா்.

இதன்படி, ராஜ்குமாா் செயலி மூலம் ரூ.10,500 செலுத்தி அனுமதிச் சீட்டை பதிவு செய்தாா். அப்போது, அவருக்கு லாபம் கிடைத்தது.

பின்னா், கடந்த ஆண்டு முதல் செயலில் தெரிவிக்கப்பட்ட வங்கிக் கணக்குக்கு மொத்தம் ரூ.6.37 லட்சம் முன்பணம் செலுத்தி அனுமதிச் சீட்டை பதிவு செய்தாா். ஆனால், தொடா்ந்து முன்பணம் செலுத்த வேண்டும் எனத் தெரிவித்தனா்.

அப்போது, தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த அவா், தேனி இணைய வழி குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸில் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியபோது, ராஜ்குமாரிடம் பணம் மோசடி செய்தா்கள் நிலக்கோட்டை அருகேயுள்ள எஸ்.புதுக்கோட்டையைச் சோ்ந்த தண்டபாணி (34), சின்னாளபட்டியைச் சோ்ந்த வெங்கட்ரமணன் (36) என்பது தெரியவந்தது. இருவரையும் போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.