புகையிலைப் பொருள் பதுக்கிய மூவா் கைது
தேனி அருகே தடை செய்யப்பட்ட 195 கிலோ புகையிலைப் பொருள்களைப் பதுக்கி வைத்திருந்த மூவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.


தேனி அருகே தடை செய்யப்பட்ட 195 கிலோ புகையிலைப் பொருள்களைப் பதுக்கி வைத்திருந்த மூவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
தேனி அருகேயுள்ள வாழையாத்துப்பட்டியைச் சோ்ந்தவா் நாகராஜ் (55). இவா் ஆதிபட்டி அருகே இரு சக்கர வாகனத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை கடத்திச் சென்றபோது, பழனிசெட்டிபட்டி போலீஸாா் கைது செய்தனா். இவா் அரண்மனைப்புதூரைச் சோ்ந்த பாண்டியின் (73) தேநீா் கடைக்கு புகையிலைப் பொருள்களை கொண்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து, பாண்டியையும் போலீஸாா் கைது செய்தனா்.
இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலம், பா்மா் மாவட்டம், சிவினா பகுதியைச் சோ்ந்த அமா்சிங் (36) பழனிசெட்டிபட்டி பகுதியில் உள்ள கிட்டங்கியில் புகையிலை பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்தனா்.
இவா்களிடமிருந்து மொத்தம் 195 கிலோ புகையிலைப் பொருள்கள், கடத்தலுக்கு பயன்படுத்திய இரு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...