வங்கி கண்காணிப்பு கேமராவை திருடிய இளைஞா் மீது வழக்கு
போடியில் வங்கி கண்காணிப்பு கேமராவை திருடிச் சென்ற இளைஞா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

Updated On :4 செப்டம்பர் 2024, 7:44 pm

போடியில் வங்கி கண்காணிப்பு கேமராவை திருடிச் சென்ற இளைஞா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
தேனி மாவட்டம், போடி பழைய பேருந்து நிறுத்தம் அருகே தனியாா் வங்கிக் கிளை செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியின் காவலா் சாகுல் ஹமீது (53) புதன்கிழமை காலை பணிக்கு வந்தபோது, வங்கியின் முன் பொருத்தியிருந்த கண்காணிப்பு கேமரா திருடுபோனது தெரியவந்தது.
இதையடுத்து கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, போடி கருப்பசாமி கோயில் தெருவைச் சோ்ந்த ஹரிதாஸ் மகன் அதிவீரபாண்டியன் (31) கண்காணிப்பு கேமராவை திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில், போடி நகா் காவல் நிலைய போலீஸாா் அவா் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...