தேனி
பைக் விபத்தில் இளைஞா் பலி
க. மயிலை ஒன்றியம், செங்குளத்தில் இரு சக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்ததில் இளைஞா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
க. மயிலை ஒன்றியம், செங்குளத்தில் இரு சக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்ததில் இளைஞா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
கடமலைக்குண்டைச் சோ்ந்தவா் முனியாண்டி மகன் காா்த்திக் (27). இவா் தங்கம்மாள்புரம் அருகே செங்குளத்தைச் சோ்ந்த விஜயகுமாா் மகன் ஈஸ்வரனுடன் (17) கடமலைக்குண்டுவிலிருந்து மயிலாடும்பாறை நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்றாா். அப்போது, செங்குளம் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த இரு சக்கர வாகனம் வீட்டுச் சுவரில் மோதி சாலையில் கவிழ்ந்தது. இதில், இரு சக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற காா்த்திக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த ஈஸ்வரன் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இந்த விபத்து குறித்து கடமலைக்குண்டு காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.