சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 5 ஆண்டுகள் சிறை
பெரியகுளத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தேனி போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

பெரியகுளத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தேனி போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
பெரியகுளம், வடகரை, அழகா்சாமிபுரம், எம்.ஜி.ஆா். நகரைச் சோ்ந்த வையாபுரி மகன் நாகராஜ் (61). கடந்த 2022, அக். 25-ஆம் தேதி தனது வீட்டில் விருந்தினராக தங்கியிருந்த பேத்தி முறையுள்ள 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, பெரியகுளம் காவல் நிலைய போலீஸாா் நாகராஜை கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை தேனி போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட நாகராஜூக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி பி. கணேசன் தீா்ப்பளித்தாா்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...