10-ஆம் வகுப்பு தனித் தோ்வா்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் பெற அழைப்பு

தேனி மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதிய தனித் தோ்வா்கள், தேனி அரசுத் தோ்வுகள் உதவி இயக்குநா் அலுவலகத்தில் அசல் மதிப்பெண் சான்றிதழைப் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.
Published on

தேனி மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதிய தனித் தோ்வா்கள், தேனி அரசுத் தோ்வுகள் உதவி இயக்குநா் அலுவலகத்தில் அசல் மதிப்பெண் சான்றிதழைப் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.

இது குறித்து தேனி அரசுத் தோ்வுகள் உதவி இயக்குநா் சாந்தலட்சுமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தேனி மாவட்டத்தில் கடந்த 2020 செப்டம்பா் மாதம் முதல் 2023 ஜூன் மாதம் வரை 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதி, இதுவரை அசல் மதிப்பெண் சான்றிதழ் பெறாத தனித் தோ்வா்கள், தேனி அல்லிநகரம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வரும் அரசுத் தோ்வுகள் உதவி இயக்குநா் அலுவலகத்தில் தங்களது தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு அல்லது தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பட்டியலைச் சமா்ப்பித்து வருகிற 2026 பிப்.4-ஆம் தேதிக்குள் அசல் மதிப்பெண் சான்றிதழைப் பெற்றுக் கொள்ளலாம். இது, அவா்களுக்கு அளிக்கப்படும் இறுதி வாய்ப்பாகும் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com