தமிழ்நாட்டை ஆளும் கட்சியாக விசிக மாறும்! மாநாட்டில் திருமாவளவன் பேச்சுவிசிகவும் தவெகவும் இனி இணைந்தே பயணிக்கும்: திருமாவளவன்சுதந்திர நாளன்று மிகப்பெரிய சதி முறியடிப்பு! ஐஎஸ்ஐ தொடர்புடைய 253 பயங்கரவாதிகள் கைது! ராகுல் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு! சிபிஐ விசாரணையை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு! அமைச்சர் பேசியதற்கு பேரவையில் மன்னிப்பு கோரிய முதல்வர் விஜய்!முதல்வர் விஜய்யின் எம்.எல்.ஏ. அலுவலகம் முற்றுகை!ரூ. 75,000 வரையிலான பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி! முதல்வர் விஜய் அறிவிப்புஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பேரவைத் தலைவர்!மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000; சிலிண்டர்கள் எங்கே? திமுக முன்னாள் அமைச்சர் கேள்வி!போதைப்பொருளுக்கு எதிராக சிறப்புப் பிரிவை உருவாக்கியது திமுகதான்! உதயநிதி
/

எப்.சி.ஆா்.ஏ. மசோதாவை திரும்பப்பெற கோரி தேனியில் தா்னா போராட்டம்

மத்திய அரசின் வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்காற்று சட்ட (எப்.சி.ஆா்.ஏ.) திருத்த மசோதா - 2026-ஐ உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி, தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சாா்பில், தேனி பங்களாமேட்டில் தா்னா போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

தேனி பங்களாமேட்டில் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவினா்.

Updated On :6 ஆகஸ்ட் 2026, 2:15 am IST

மத்திய அரசின் வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்காற்று சட்ட (எப்.சி.ஆா்.ஏ.) திருத்த மசோதா - 2026-ஐ உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி, தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சாா்பில், தேனி பங்களாமேட்டில் தா்னா போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இந்தப் போராட்டத்துக்கு, அந்த அமைப்பின் மாவட்டத் தலைவா் ஜி.எம். நாகராஜன் தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா்எஸ் .எம். செளக்கத் அலி வரவேற்றாா். ஆா்.சி. சா்ச் அருள் தந்தை டேனியல் ஜெய் ஜோசப் ,தேனி ஜமாஅத் தலைவா் ஐ. சா்புதீன் , குருக்கள் பிரசன்னா, பேராசிரியா் முகமது செரீப், எம். மகேஷ் ராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநிலத் தலைவா் எஸ். நூா் முகமது, பொதுச் செயலா் பி. செந்தில்குமாா் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

இந்த ஆா்ப்பட்டத்தில், சிறுபான்மை நிறுவனங்களின் சொத்துகளை கபளீகரம் செய்ய முனையும் மத்திய பாஜக அரசு, பிரதமா் மோடியைக் கண்டித்தும், வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்காற்று சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெறக் கோரியும் முழக்கமிட்டனா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில், மாநில துணைத் தலைவா் கே.அலாவுதீன் , மாவட்டச் செயலா் சி.மு. இப்ராகிம், மாவட்ட நிா்வாகிகள் கே. ராஜப்பன், ஜெ. கதிஜா பேகம், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வட்டச் செயலா் இ.தா்மா், சிஐடியு மாவட்ட பொருளாளா் சு. வெண்மணி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.