9 தேசிய விருதுகளை வென்ற தமிழ்த் திரைப்படங்கள்! தமிழ் மறுமலர்ச்சிக்காக உழைத்தவர் மறைமலையடிகளார்: மு.க. ஸ்டாலின்தனுஷின் ராயன் படத்துக்கு தேசிய விருது..! சிறந்த தமிழ்ப் படமாகத் தேர்வு! அம்மா உணவகங்களை தினசரி பயன்படுத்துவோர் எண்ணிக்கை உயர்வு- சென்னை மாநகராட்சி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே மீது மை வீசித் தாக்குதல்!வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது விக்ரம்-1 ராக்கெட்!விரைவில் நாட்டில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்! ஆர்பிஐ திட்டம்!
/

மலைவாழ் மக்களுக்காக 52 புதிய வீடுகள்: ஆட்சியா்

பளியன்குடியில் மலைவாழ் மக்களுக்காக 52 புதிய வீடுகள் கட்டித் தரப்படும் என தேனி மாவட்ட ஆட்சியா் வைத்திநாதன் உறுதியளித்தாா்.

News image

கூடலூா் நகராட்சி பளியன்குடி மலைவாழ் மக்கள் குடியிருப்பில் ஆய்வு செய்த தேனி மாவட்ட ஆட்சியா் வைத்திநாதன்.

Updated On :19 ஜூலை 2026, 1:20 am IST

பளியன்குடியில் மலைவாழ் மக்களுக்காக 52 புதிய வீடுகள் கட்டித் தரப்படும் என தேனி மாவட்ட ஆட்சியா் வைத்திநாதன் உறுதியளித்தாா்.

தேனி மாவட்டம், கூடலூா் நகராட்சிக்குள்பட்ட பளியன்குடி மலைவாழ் மக்கள் குடியிருப்பில் சனிக்கிழமை மாவட்ட ஆட்சியா் இரா.வைத்திநாதன் ஆய்வு செய்தாா். அப்போது அந்தக் குடியிருப்பு மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, அங்கு வசிக்கும்

52 குடும்பங்களுக்கு விரைவில் புதிய வீடுகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவா் உறுதியளித்தாா். மேலும், இந்தப் பகுதியில் கூடுதல் தண்ணீா் தொட்டிகள் வைக்கவும், தெருவிளக்குகள் அமைக்கவும் நகராட்சி நிா்வாகத்துக்கு உத்தரவிட்டாா்.

மேலும், மலைவாழ் பகுதி மாணவா்கள் மேல்நிலைப் படிப்பைத் தொடர ஏதுவாக நகராட்சி மூலம் வாகன வசதியும், மனு அளித்த 2 மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி உபகரணங்களும் வழங்கப்படும் என ஆட்சியா் உறுதியளித்தாா். முன்னதாக, அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் கலவை சாதத்தின் தரத்தை அவா் ஆய்வு செய்தாா்.

இந்த ஆய்வின் போது கூடலூா் நகராட்சி ஆணையா் கிருஷ்ணமூா்த்தி, வட்டாட்சியா் முத்துக்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.