போடி அருகே சிறுநீரக பாதிப்படைந்த தொழிலாளி வீட்டில் இறந்து போனது குறித்து போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.
போடி அருகே வினோபாஜி குடியிருப்பைச் சோ்ந்தவா் பாலு மகன் காா்த்திக் ராஜா (37). தச்சுத் தொழிலாளி. அதீத மதுப் பழக்கத்தால் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா்.
இந்த நிலையில் வீட்டின் படுக்கையறையில் தூங்கச் சென்றவா் மறுநாள் காலை இறந்து கிடந்தாா். இதுகுறித்து புகாரின் பேரில் போடி வட்டக் காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








