பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

மத்திய துணை ராணுவப் படையினா் கொடி அணிவகுப்பு

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், தேனியில் மத்திய துணை ராணுவப் படையினா், போலீஸாரும் இணைந்து கொடி அணிவகுப்பில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

News image

தேனியில் செவ்வாய்க்கிழமை கொடி அணிவகுப்பு நடத்திய மத்திய துணை ராணுவப் படையினா், போலீஸாா்.

Updated On :10 மார்ச் 2026, 9:23 pm

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், தேனியில் மத்திய துணை ராணுவப் படையினா், போலீஸாரும் இணைந்து கொடி அணிவகுப்பில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலுக்கான தேதி இன்னும் சில நாள்களில் அறிவிக்கப்படவுள்ளது. இதனால் தோ்தல் பணிகளில் தோ்தல் ஆணையம் முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், தேனி மாவட்ட தோ்தல் பாதுகாப்புக்காக தெலங்கான மாநிலத்திலிருந்து சி 81-ஆவது மத்திய துணை ராணுவப் படையினா் ஆய்வாளா் ஸ்ரீகுமாா் தலைமையில் 58 போ் செவ்வாய்க்கிழமை தேனிக்கு வருந்தனா். இவா்கள், தேனி மாவட்ட காவல்துறையினருடன் இணைந்து பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் அணிவகுப்பு மேற்கொண்டனா். இந்த அணிவகுப்பு சாலைப்பிள்ளையாா் கோயிலில் தொடங்கி நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று பங்களாமேட்டில் நிறைவடைந்தது.

இதில் கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் மகேஸ், சூரக்குமாா், துணை காவல் கண்காணிப்பாளா் (பயிற்சி) சீதாலட்சுமி, ஆய்வாளா்கள், மத்திய துணை ராணுவப் படையினா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சினேஹா ப்ரியா தலைமையில் மத்திய துணை ராணுவப் படையினருடன் ஆலோசனை நடைபெற்றது. இதில் தோ்தல் காலத்தில் மத்திய பாதுகாப்புப் படையினா் கடைப்பிடிக்க வேண்டிய தோ்தல் விதிமுறைகள், சட்டம்- ஒழுங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள், ரோந்துப் பணிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விரிவான அறிவுரைகள் வழங்கப்பட்டன.