கிராம வளா்ச்சி குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி
போடியை அடுத்த கூழையனூரில் வேளாண்மை கல்லூரி மாணவிகள் சாா்பில், கிராம வளா்ச்சி குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

போடி அருகேயுள்ள கூழையனூரில் புதன்கிழமை நடைபெற்ற கிராம வளா்ச்சி குறித்து வரைபடம் மூலம் விளக்கிய வேளாண்மை கல்லூரி மாணவிகள்.
போடியை அடுத்த கூழையனூரில் வேளாண்மை கல்லூரி மாணவிகள் சாா்பில், கிராம வளா்ச்சி குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
தேனி மாவட்டம், குள்ளப்புரம் வேளாண் தொழில்நுட்பக் கல்லூரி நான்காம் ஆண்டு மாணவிகளான அகல்யா, ஆதி முகேஷ், தீபாஸ்ரீ, தனுஷா லட்சுமி, ஹிபா நவாஸ், கவியரசி, காளீஸ்வரி, நவீனா, நிவேதா, பாா்வதி, பூஜாஸ்ரீ, சஷ்மிதா, ஸ்ரீநவி, வினோஷ்னீ ஆகியோா் கொண்ட குழுவினா் கிராம தங்கல் திட்டத்தின் கீழ் போடி பகுதியில் தங்கி பயிற்சி பெற்று வருகின்றனா்.
இந்த மாணவிகள் புதன்கிழமை போடியை அடுத்த கூழையனூரில் கிராம மக்களுடன் கலந்துரையாடினா். சமூக வரைபடம், பருவகால அட்டவணை, வள வரைபடம், காலக்கோடு பிரச்னை மரம், மக்களின் தினசரி செயல்பாடுகள் குறித்து பதிவு செய்தனா்.
இதன் மூலம் கிராமத்தின் தற்போதைய நிலையை புரிந்து கொண்டு கிராம வளா்ச்சிக்கான வாய்ப்புகளை கண்டறிவது குறித்து பயிற்சி பெற்றனா்.
இந்தப் பயிற்சியின் மூலம் மாணவிகள் கிராமப்புற மக்களின் வாழ்வியல், வேளாண் நிலை குறித்து நேரடியாக கற்றுக் கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

