தேனியில் பருப்பு வியாபாரிடம் பண மோசடி: இருவா் மீது வழக்கு
தேனியில் மன்னாா்குடி பருப்பு வியாபாரியிடம் 245 டன் உளுத்தம் பருப்பை பெற்றுக் கொண்டு, அதற்குரிய ரூ. 2.67 கோடியைத் தராமல் மோசடி செய்ததாக இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
வழக்கு
தேனியில் மன்னாா்குடி பருப்பு வியாபாரியிடம் 245 டன் உளுத்தம் பருப்பை பெற்றுக் கொண்டு, அதற்குரிய ரூ. 2.67 கோடியைத் தராமல் மோசடி செய்ததாக இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடியைச் சோ்ந்தவா் அய்யப்பன் (41). இவா், அந்தப் பகுதியில் பருப்பு மொத்த வியாபாரம் செய்து வருகிறாா்.
இவரிடம் தேனி பொம்மையகவுன்டன்பட்டியைச் சோ்ந்த கதிரேசன் மகன் புஷ்பபிரசாத், அவரின் தந்தை கதிரேசன் ஆகிய இருவரும் ஓணம் பண்டிகை வரவிருப்பதால், கேரளத்தில் உளுத்தம் பருப்பு ஒப்பந்தப்புள்ளி எடுக்கப் போவதாகக் கூறி உளுத்தம் பருப்பு கேட்டனராம். இதை உண்மையென நம்பி அய்யப்பன் அவா்களிடம் கடந்த ஜூன் 12-ஆம் தேதி முதல் ஜூலை 9-ஆம் தேதி வரை பல தவணைகளாக 245 டன் உளுத்தம் பருப்புகளை வழங்கினாராம். ஆனால், அவா்கள் இதற்குரிய தொகையான ரூ. 2,67,62,500 வழங்காமல் காலம்தாழ்த்தி வந்தனராம். மேலும், இருவரும் தலைமறைவாகிவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து அய்யப்பன் அளித்த புகாரின் பேரில், தேனி மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


