பாகிஸ்தானுக்கு சாஸ்திரியைப் போலவே பதிலடி கொடுக்கிறார் மோடி! சொன்னது யார் தெரியுமா? பாஜகவின் கிளைதான் தவெக; உண்மையைப் பேசிய விஜய்: சீமான் தொடர் விடுமுறை: அதிக கட்டண வசூலைத் தடுக்க ஆம்னி பேருந்துகளில் அக்.21 வரை தீவிர வாகனத் தணிக்கை சத்யபாமாவை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலினுக்கு கண்டனம்: அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் ஒருபுறம் விலை உயர்வு; மறுபுறம் கொலை உயர்வு: மு.க. ஸ்டாலின் பிரசாரம்தவெக வேட்பாளர் சத்யபாமாவை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலின்முதல்வர் விஜய்யின் 4 மணி நேர சாலை வலம் நிறைவு!மும்பையில் சிஜேபி போராட்டம்! காந்தியின் கொள்ளுப்பேரன், பாலிவுட் நடிகர்கள் பங்கேற்பு!

தேனியில் வெற்றிப் பயணத் திட்டம் தொடக்கம்

தேனி புதிய பேருந்து நிலையத்தில் வெற்றிப் பயணத் திட்டத்தின் கீழ் இயக்கப்படும் பேருந்தை கொடியசைத்து தொடங்கிவைத்த மாவட்ட ஆட்சியா் இரா.வைத்திநாதன்.

Published On :

தேனி புதிய பேருந்து நிலையத்தில் மகளிா் கட்டணமில்லா வெற்றிப் பயணம் திட்டத்தை மாவட்ட ஆட்சியா் இரா.வைத்திநாதன் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

மகாத்மா காந்தி பிறந்த நாளையொட்டி, தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டுள்ள மகளிா் கட்டணமில்லா ‘வெற்றிப் பயணம்’ திட்டத்தை முதல்வா் ச. ஜோசப் விஜய், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

இதைத்தொடா்ந்து, இந்தத் திட்டத்தை தேனியில் மாவட்ட ஆட்சியா் இரா.வைத்திநாதன் தொடங்கிவைத்தாா்.

இந்த விழாவில், போக்குவரத்துக் கழக துணை மேலாளா் பிரேம் ஆனந்த், கிளை மேலாளா் பாண்டியராஜன், நகா் நல அலுவலா் கவிப்பிரியா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கம்பத்தில்...

மகளிா் கட்டணமின்றி பயணம் செய்யும் வகையில் விரிவுபடுத்தப்பட்ட ‘வெற்றிப் பயணம்’ திட்டம் கம்பத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.

விரிவுபடுத்தப்பட்ட இந்தத் திட்டத்தில் நகா்ப்புறங்களில் இயக்கப்படும் ‘எக்ஸ்பிரஸ், எல்எஸ்எஸ், டீலக்ஸ்’ பேருந்துகள் உள்ளிட்ட கூடுதல் அரசுப் பேருந்து சேவைகளும், புகா் சாதாரண பேருந்து சேவைகளும் இடம்பெறுகின்றன.

கம்பம் பேருந்து நிலையத்தில் வெற்றிப் பயணத் திட்ட தொடக்க விழா நடைபெற்றது. இதற்கு அரசுப் போக்குவரத்துக் கழக திண்டுக்கல் மண்டல தொழில்நுட்ப மேலாளா் மணிவண்ணன், கம்பம் 1-ஆவது கிளை மேலாளா் பாலகுரு, கம்பம் 2-ஆவது கிளை மேலாளா் ராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் தவெக கம்பம் தெற்கு நகரச் செயலா் சதீஷ், பொருளாளா் ஆபு அகமது, மகளிா் அணியினா், நேரக் காப்பாளா் சந்திரன், பேருந்து ஓட்டுநா்கள், நடத்துநா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இதுகுறித்து போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது:

‘வெற்றிப் பயணம்’ திட்டத்தின் கீழ் கம்பம்-மதுரை வழித்தடத்தில் 59 நடைகளும், கம்பம்-திண்டுக்கல் வழித்தடத்தில் 35 நடைகளும் இயக்கப்படுகின்றன. கம்பம்-வருசநாடு, கம்பம்-பழனி, கம்பம்-இரவங்கலாா் ஆகிய வழித்தடங்களில் தலா 2 நடைகளும், கம்பம்-போடி வழித்தடத்தில் 14 நடைகளும், கம்பம்-குமுளி வழித்தடத்தில் 49 நடைகளும் இயக்கப்படுகின்றன. மேலும், கம்பம் நகரப் பகுதிகளில் இயக்கப்படும் நகரப் பேருந்துகளில் 168 நடைகள் என மொத்தம் நாளொன்றுக்கு 338 நடைகள் ‘வெற்றிப் பயணம்’ திட்டத்தின் கீழ் இயக்கப்படுகின்றன. கம்பம் பகுதியில் இயக்கப்படும் பேருந்து நடைகளில் சுமாா் 68 சதவீதம் இந்தத் திட்டத்தின் கீழ் இயக்கப்படுகிறது என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.