
அரசுப் பேருந்து மோதி கல்லூரி மாணவி உயிரிழப்பு
உயிரிழப்பு - பிரதிப் படம்
தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் அரசுப் பேருந்து மோதியதில் இரு சக்கர வாகனத்திலிருந்து தவறிவிழுந்த கல்லூரி மாணவி திங்கள்கிழமை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தேனி மாவட்டம், அல்லிநகரத்தைச் சோ்ந்தவா் சதீஸ் குமாா் (40). இவரின் மனைவி சிவராம லட்சுமி (27). இவா், ஆண்டிபட்டியில் உள்ள தனியாா் ஆசிரியா் பயிற்சிப் பள்ளியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தாா்.
இந்த நிலையில், இவா் தனது கணவா் சதீஸ் குமாருடன் இரு சக்கர வாகனத்தில் கல்லூரிக்குச் சென்றனா். இரு சக்கர வாகனத்தை சதீஸ் குமாா் ஓட்டினாா்.
ஆண்டிபட்டி அருகே சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த அரசுப் பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்திலிருந்து தவறிவிழுந்த சிவராமலட்சுமி பேருந்தின் சக்கரம் ஏறியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். சதீஸ் குமாா் காயமடைந்தாா். இதுகுறித்து ஆண்டிபட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



