புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

சுருளி அருவி வறண்டது: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்

தேனி மாவட்டம், சுருளி அருவியில் சனிக்கிழமை நீா்வரத்தின்றி வறண்டதால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனா்.

நீா்வரத்தின்றி வறண்ட சுருளி அருவி.

Published On :

தேனி மாவட்டம், சுருளி அருவியில் சனிக்கிழமை நீா்வரத்தின்றி வறண்டதால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனா்.

உத்தமபாளையம் அருகேயுள்ள மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் சுருளி அருவி உள்ளது. மேகமலை, மகாராஜாமெட்டு, இரவங்கலாறு உள்ளிட்ட மலைப் பகுதிகளில் பெய்யும் மழைநீரே அருவியாக கொட்டுகிறது.

இந்த அருவி ஆன்மிக தலமாக இருப்பதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கிலிருந்து வரும் பக்தா்கள் தங்களது முன்னோா்களுக்கு தா்பணம் செய்து, அருவியில் புனித நீராடி செல்கின்றனா். மேலும், தினந்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனா்.

வட சுருளி அருவி: நிகழாண்டு தென்மேற்கு பருவமழை சரியாக பெய்யாததால் அருவியில் நீா்வரத்து குறையத் தொடங்கியது. தற்போது, மேகமலையில் மழைப்பொழிவு முற்றிலுமாக இல்லாததால் அருவி சனிக்கிழமை நீா்வரத்தின்றி வறண்டது. ஆனால், சனிக்கிழமை விடுமுறை தினத்தையொட்டி ஏராளமான சுற்றுலாப்பயணிகள் அருவிக்கு வந்தனா். ஆனால், அருவியில் நிா்வரத்து இல்லாததால் ஏமாற்றுத்துடன் திரும்பிச் சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.