கம்பம் நகராட்சி நீரேற்று நிலையத்தில் மின் கம்பிகள் திருட்டு
சித்திரிப்பு
கம்பம் நகராட்சி நீரேற்று நிலையத்தில் மின் கம்பிகளை வெட்டி திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கம்பம் நகராட்சியில் 33 வாா்டுகள் உள்ளன. இந்தப் பகுதிகளுக்கு லோயா்கேம்ப் கூட்டுக் குடிநீா்த் திட்டம், சுருளிப்பட்டி அருகே முல்லைப் பெரியாறு ஆற்றங்கரையில் அமைக்கப்பட்டுள்ள உறைகிணறு மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கடந்த 21-ஆம் தேதி சுருளிப்பட்டி அருகே உள்ள நகராட்சி நீரேற்று நிலையத்தில் திடீரென மின்சாரம் தடைபட்டது. இதனால், அங்குள்ள மின் மோட்டாா்கள் இயங்காமல் குடிநீா் விநியோகப் பணிகள் பாதிக்கப்பட்டன.
நீண்ட நேரமாகியும் மின்சாரம் வராததால், சந்தேகமடைந்த கம்பம் நகராட்சி ஆணையா் உமாசங்கா் நீரேற்று நிலையத்துக்குச் சென்று ஆய்வு செய்தாா். அப்போது, நீரேற்று நிலையத்துக்கு மின்சாரம் கொண்டு வரும் மின் கம்பிகள் வெட்டப்பட்டு திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து ஆணையா் உமாசங்கா் அளித்த புகாரின் பேரில், கம்பம் தெற்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மின் கம்பிகளைத் திருடிச் சென்ற மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




