வ.புதுப்பட்டியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு பேரணி
ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, வ.புதுப்பட்டி பேரூராட்சியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு பேரணி வியாழக்கிழமை பேரூராட்சி செயல் அலுவலர் மா.சேகர் தலைமையில் நடைபெற்றது.


ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, வ.புதுப்பட்டி பேரூராட்சியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு பேரணி வியாழக்கிழமை பேரூராட்சி செயல் அலுவலர் மா.சேகர் தலைமையில் நடைபெற்றது.
துணைத் தலைவர் வே.சுப்புராம் முன்னிலையில், தலைவர் ந.பவுன்தாய் பேரணியை கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
சுகாதார மேற்பார்வையாளர் வெ.லிங்கமுத்து வரவேற்றார்.
பேரணியில் பங்கேற்ற பள்ளி மாணவ மாணவியரிடையே செயல் அலுவலர் மா.சேகர் பேசுகையில் கூறியதாவது: டெங்கு காய்ச்சல் பகலில் கடிக்கும் ஏடிஎஸ். கொசுவினால் உண்டாகிறது. எனவே இக் கொசு உற்பத்தியாகும் இடங்களை அழித்தல் தான் நோய் வருமுன் காத்தல் ஆகும். தண்ணீர் தேங்கும் வகையில் உள்ள பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும். மாணவர்கள் தங்கள் வீடுகளிலும், சுற்றுப்புறத்திலும், தெரிந்தவர்களிடமும் இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். தினமும் காய்ச்சி வடிகட்டிய குடிநீரை குடிக்க வேண்டும். வீடுகளைச் சுற்றிலும் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சுகாதாரப் பணியாளர்கள் கொசு மருந்து அடிக்க வரும்போது, வீட்டினுளும் மருந்து அடிக்க அனுமதிக்க வேண்டும் என்றார் அவர்.
பேரணியில் பங்கேற்ற மாணவர்கள் விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பியும், விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியும் சென்றனர். மேலும் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் பேரூராட்சியின் அனைத்து வார்டுகளிலும் கொடுக்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் மா.சேகர், சுகாதார மேற்பார்வையாளர் வெ.லிங்கமுத்து மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...