கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

திருத்தங்கல் பெருமாள் கோயில் தீர்த்தக் குளத்தில் கழிவுநீர் கலப்பது தடுப்பு

தினமணி செய்தி எதிரொலியாக, திருத்தங்கல் ஸ்ரீ நின்ற நாராயணப் பெருமாள் கோயில் தீர்த்தக் குளத்தில் கழிவுநீர் கலப்பது தடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :9 நவம்பர் 2017, 11:25 pm

DIN

தினமணி செய்தி எதிரொலியாக, திருத்தங்கல் ஸ்ரீ நின்ற நாராயணப் பெருமாள் கோயில் தீர்த்தக் குளத்தில் கழிவுநீர் கலப்பது தடுக்கப்பட்டுள்ளது.
      திருக்கோயில் நுழைவுவாயில் அருகே அக்ரஹாரம் சாலையிலிருந்து கோயிலில் அமைந்துள்ள பாபநாச தீர்த்தத்துக்கு பாதை அமைக்கப்பட்டது. இந்தப் பாதையைப் பயன்படுத்தி, இரவு நேரங்களில் தீர்த்தக் குளத்தில் சிறுநீர் கழிப்பது உள்ளிட்ட அசுத்தம் செய்யப்பட்டு வந்ததால், கோயில் நிர்வாகம் 10 ஆண்டுகளுக்கு முன்னரே தீர்த்தக் குளத்துக்கு செல்லும் பாதையை ஒருபுறம் அடைத்து சுவர் எழுப்பியது.
     ஏற்கெனவே இருபுறமும் சுவர் உள்ளதால், இந்தப் பகுதி ஒரு அறைபோல் அமைந்துவிட்டது. பாதை அடைக்கப்பட்டாலும், அதன் கதவு மூடப்பட வில்லை. இதனால்,  அந்த இடம் சிறுநீர் கழிப்பிடமாக மாறியது.
    அப்பகுதியில் கடை வைத்துள்ளவர்களும் இந்த இடத்தை சிறுநீர் கழிக்கப் பயன்படுத்தினர். மேலும், கழிவுகளும் கொட்டப்பட்டு வந்ததால்,  அப்பகுதியில் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசியது.  மழைக் காலங்களில் கழிவுநீர் தீர்த்தக் குளத்தில் கலந்தது.
     இந்த அறை போன்ற இடத்தை, மணவாள மாமுனிவர் அறக்கட்டளையினரும், கோயில் நிர்வாகமும் சொந்தம் கொண்டாடி வந்ததால், சுகாதாரம் கேள்விக்குறியாகியது. இந்நிலையில், கோயில் தீர்த்தக் குளத்தில் கழிவு நீர் கலப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என, தினமணியில் கடந்த அக்டோபர் 28 ஆம் செய்தி வெளியிடப்பட்டது. அதன் எதிரொலியாக, திருத்தங்கல் செங்கமலத் தாயார் டிரஸ்ட் நிர்வாகிகள், இந்த அறையினுள் யாரும் நுழைய முடியாத வகையில் தகரத்தை வைத்து அடைத்து விட்டனர்.    இது குறித்துஅப்பகுதியைச் சேர்ந்த சங்கர் என்பவர் கூறுகையில், தினமணியில் செய்தி வெளியானதையடுத்து, திருத்தங்கல் செங்கமலத்தாயார் டிரஸ்ட் நிர்வாகிகள் சுகாதாரக் கேட்டினை ஏற்படுத்திவரும் அறையை பார்வையிட்டனர். புதன்கிழமை, அந்த அறையை உள்ளே செல்ல முடியாத வகையில் தகரத்தை வைத்து மூடிவிட்டனர். இதனால், தீர்த்தக் குளத்தில் கழிவு நீர் கலப்பது தடுக்கப்பட்டுள்ளது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.