திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

சிவகாசியில் குழந்தைகளுக்கான மினி மாரத்தான் போட்டி

ஜேசிஐ சிவகாசி டைனமிக் சங்கம் சார்பில், அரிமா, சுழற்சங்கம் ஆகியவற்றின் ஆதரவுடன், பட்டாசுத் தொழில்

Updated On :25 பிப்ரவரி 2019, 7:29 am IST

ஜேசிஐ சிவகாசி டைனமிக் சங்கம் சார்பில், அரிமா, சுழற்சங்கம் ஆகியவற்றின் ஆதரவுடன், பட்டாசுத் தொழில் சிறப்பாக நடைபெற வேண்டும் என குழந்தைகளுக்கான மினி மாரத்தான் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது.
    அண்ணாமலை நாடார்-உண்ணாமலைஅம்மாள் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் தொடங்கிய இப்போட்டியை, விருதுநகர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மு.ராஜராஜன் கொடியசைத்து தொடக்கி வைத்தார். 
     இப்போட்டியில், 4 முதல் 5 வயது குழந்தைகளுக்கு 0.5 கி.மீ. மற்றும் 6 முதல் 8 வயது வரையிலான குழந்தைகளுக்கு1 கி.மீ. தொலைவு என நிர்ணயிக்கப்பட்டு, இந்த இரு பிரிவிலும் குழந்தைகளுடன் பெற்றோர்களும் கலந்துகொண்டனர். மேலும், 9 முதல் 12 வயது சிறுவர்களுக்கு 2 கி.மீ., 13 முதல் 15 வயது சிறுவர்களுக்கு 3 கி.மீ. தொலைவு என நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.    இதில், மொத்தம் 6,100 பேர் கலந்துகொண்டனர்.   இவர்கள் அனைவருக்கும் டி-சர்ட், சான்றிதழ், பதக்கம் ஆகியவற்றை தொழிலதிபர் ரவிச்சந்திரன், ஜேஸீஸ் சங்க மண்டலத் தலைவர் கார்த்திகேயன் ஆகியோர் வழங்கினர்.
     சிவகாசி காவல் துணைக் கண்காணிப்பாளர் பிரபாகரன் தலைமையில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். சிவகாசி டைனமிக் சங்கத் தலைவர் பாலாஜி நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.