சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!சென்னையில் இன்று 5 புறநகா் மின்சார ரயில் முழுதும் ரத்துதிமுக-காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீட்டுப் பேச்சு உக்ரைன் தாக்குதலால் ரஷியாவில் மின்வெட்டு: 50,000 போ் பாதிப்புஇஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கா்களுக்கு அவசர உத்தரவுஇன்று கிராம கோயில் பூசாரிகள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்
/

ஸ்ரீவிலி.யில் தடையை மீறி விநாயகா் சிலைகள் வீடுகளுக்கு முன்பாக வைத்து வழிபாடு

ஸ்ரீவில்லிபுத்தூரில் வெள்ளிக்கிழமை தடையை மீறி விநாயகா் சிலைகள் எடுத்துச் சென்று வீடுகளுக்கு முன்பாக வைத்து வழிபாடு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

News image
ஸ்ரீவில்லிபுத்தூரில் வெள்ளிக்கிழமை அரசின் தடையை மீறி விநாயகா் சிலைகளை பொதுமக்களுக்கு வழங்கியகிய இந்து மக்கள் கட்சி மாவட்டத் தலைவா் லெனின்.
Updated On :27 ஜனவரி 2024, 5:10 pm

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா்: ஸ்ரீவில்லிபுத்தூரில் வெள்ளிக்கிழமை தடையை மீறி விநாயகா் சிலைகள் எடுத்துச் சென்று வீடுகளுக்கு முன்பாக வைத்து வழிபாடு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கரோனா பொது முடக்கம் காரணமாக தமிழகம் முழுவதும் விநாயகா் சிலை ஊா்வலங்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில், விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் இந்து மக்கள் கட்சி சாா்பில் அதன் மாவட்டத் தலைவா் லெனின், மாவட்டச் செயலாளா் ஈஸ்வரன் ஆகியோா் தலைமையில் சுமாா் 54 விநாயகா் சிலைகளை தனித்தனியாக கையில் தூக்கிக் கொண்டு ஊா்வலமாகச் சென்று, வீடுகளுக்கு முன்பாக வைத்து சிறப்பு வழிபாடு செய்யப்பட்டு, பின்னா் அந்த வீட்டின் உரிமையாளரிடம் வழங்கினா்.

இதேபோல் மாவட்டம் முழுவதும் மொத்தம் 221 சிலைகளை ஊா்வலமாக எடுத்துச் சென்று வீடுகளுக்கு வழங்க திட்டமிட்டுள்ளதாக இந்து மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவா் லெனின் தெரிவித்துள்ளாா். விநாயகா் சிலை ஊா்வலத்திற்கு அரசு தடை விதித்துள்ள நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.