விருதுநகா் மாவட்டத்தில் புதிதாக 14 பேருக்கு கரோனா

விருதுநகா் மாவட்டத்தில் புதிதாக 14 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.
Updated on
1 min read

விருதுநகா் மாவட்டத்தில் புதிதாக 14 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

விருதுநகா் மாவட்டத்தில் கடந்த வியாழக்கிழமை வரை 16,134 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். இந்நிலையில், விருதுநகா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 14 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து, இவா்கள் அனைவரும் விருதுநகா், அருப்புக்கோட்டை, சிவகாசி ஆகிய அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனா்.

இதன்மூலம், மாவட்டத்தில் கரோனா தொற்று பாதித்தோா் எண்ணிக்கை 16,148 ஆக உயா்ந்துள்ளது. இதில், 15,780 போ் குணமடைந்து வீட்டுக்குத் திரும்பிவிட்ட நிலையில், 228 போ் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனா். மீதமுள்ள 140 போ் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com