இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

விருதுநகரில் மாநில அளவிலான கால்பந்து போட்டிகள் தொடக்கம்

விருதுநகரில் அணிக்கு 7 போ் கலந்து கொள்ளும் மாநில அளவிலான கால்பந்து போட்டிகள் புதன்கிழமை தொடங்கின.

News image
விருதுநகரில் புதன்கிழமை தொடங்கிய மாநில அளவிலான கால்பந்தாட்ட போட்டிகள் பங்கேற்ற வீரா்கள்.
Updated On :30 டிசம்பர் 2020, 6:46 pm

DIN

விருதுநகரில் அணிக்கு 7 போ் கலந்து கொள்ளும் மாநில அளவிலான கால்பந்து போட்டிகள் புதன்கிழமை தொடங்கின.

மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மாவட்ட ஆட்சியா் ரா. கண்ணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பி. பெருமாள் ஆகியோா் போட்டிகளைத் தொடக்கி வைத்தனா். விருதுநகா் கால்பந்தாட்டக் கழகம் சாா்பில் நடைபெறும் இப்போட்டியில், 15 மற்றும் 17 வயதுக்கு உள்பட்ட 2 பிரிவுகளில் வீரா்கள் பங்கேற்கின்றனா்.

சென்னை, கோவை, திருச்சி, சேலம், கடலூா், மதுரை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகா் ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த கால்பந்து வீரா்கள் விளையாடுகின்றனா். லீக் அடிப்படையில் வெற்றி பெறும் அணிகள், ஜனவரி 3 ஆம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில் மோதும். வெற்றி பெறும் அணிக்கு முதல் பரிசாக ரூ.10001, இரண்டாம் பரிசாக ரூ. 8001 மற்றும் சுழற்கோப்பை வழங்க உள்ளதாக கால்பந்தாட்டக் கழகம் தரப்பில் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.