சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!சென்னையில் இன்று 5 புறநகா் மின்சார ரயில் முழுதும் ரத்துதிமுக-காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீட்டுப் பேச்சு உக்ரைன் தாக்குதலால் ரஷியாவில் மின்வெட்டு: 50,000 போ் பாதிப்புஇஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கா்களுக்கு அவசர உத்தரவுஇன்று கிராம கோயில் பூசாரிகள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்
/

தண்டவாளத்தில் மின்சார வயர்: சிலம்பு விரைவு ரயில் தாமதம்

அருப்புக்கோட்டை அருகே மின்சார வயர் அறுந்து விழுந்ததால் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில் சனிக்கிழமை ஒரு மணி நேரம் தாமதமாகப் புறப்பட்டுச் சென்றது.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 8:04 am

DIN


அருப்புக்கோட்டை அருகே மின்சார வயர் அறுந்து விழுந்ததால் சிலம்பு விரைவு ரயில் சனிக்கிழமை ஒரு மணி நேரம் தாமதமாகப் புறப்பட்டுச் சென்றது.

விருதுநகர் முதல் மானாமதுரை வரை தண்டவாளப் பகுதிகளில் மின்மயமாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் சென்னையிலிருந்து செங்கோட்டை நோக்கி சிலம்பு விரைவு ரயில் சனிக்கிழமை சென்று கொண்டிருந்தது.

அருப்புக்கோட்டை அருகே தொட்டியங்குளம் பகுதியில் ரயில் வந்தபோது, மின் வயர்கள் அறுந்த நிலையில் தண்டவாளத்தில் கிடந்துள்ளன. மின்சார இணைப்பு வழங்கப்படாத நிலையில், அந்த மின் வயர்கள் ரயில் இன்ஜின் பகுதியில் சுற்றி உள்ளது. இதைக் கண்ட ரயில் ஓட்டுநர் ரயிலை நிறுத்தி, ரயில்வே நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தார். 

இதைத் தொடர்ந்து அங்கு சென்ற ரயில்வே ஊழியர்கள், இன்ஜின் பகுதியில் சுற்றி இருந்த வயர்களை அகற்றினர். இதனால், ஒருமணி நேர தாமதத்திற்குப் பின் மீண்டும் செங்கோட்டை நோக்கி சிலம்பு விரைவு ரயில் சென்றது.

இதுகுறித்து ரயில்வே காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.